சமந்தா கண்ணீருடன் உருக்கமான பதில்

by Admin / 10-01-2023 12:51:20pm
சமந்தா கண்ணீருடன் உருக்கமான பதில்

தமிழ்-தெலுங்கு என பலமொழிப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை சமந்தா.நடிகர்நாகர்ஜீனன்,அமலா தம்பதியின்
நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.ஆரம்பத்தில் சந்தோஷமாக குடும்பம் நடத்தியவர்களின்வாழ்க்கை பாதையில் சிக்கல்களும் பிரச்சனைகளும் உருவாகி ...விவாகரத்தில் இருவரது தாம்பத்யம் முடிவுற்றது. சமந்தாமீண்டும் புத்தெழுச்சியுடன் நடிக் க வந்தார் .முன்பபை விட ..பட வாய்ப்பும் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகைகளின்பட்டியலில் முதலிடம் பிடித்தார்.இந்நிலையில் திடிரென்று நரம்பு மற்றும் தோல்,தசை நோயான மயோசிடிஸில் பாதிப்படைந்து  வெளிநாட்டில் சிகிச்சைக்குச்சென்று திரும்பினார். அவர் நடித்து அடுத்த மாதம் வரவுள்ள

 சகுந்தலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார், அதே நேரத்தில் அவர் உணர்ச்சிவசப்பட்டார்.

"நான் என் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை எதிர்கொண்டேன், ஆனால் என் வாழ்நாள் முழுவதும் மிகவும் நிலையான ஒன்று நான் சினிமாவை எவ்வளவு நேசிக்கிறேன் மற்றும் சினிமா என்னை எவ்வளவு நேசிக்கிறது என்பதுதான்" என்று சமந்தா நிகழ்வில் கூறினார்.

.ரசிகர்கள் அவர் அழகு குறைந்து விட்டதாக  சமூகவலைத்தளத்தில் மனம் புண்படும்படியான செய்திகள் உலா வந்தன்.இதற்கு பதிலளிக்கும்நிலையில் எனக்கு ஏற்பட்டது போன்ற பாதிப்பு உங்களுக்கு ஏற்படாதிருக்க பிரார்த்திக்கிறேன் என்று உருக்கமாக பேசியதோடு. அது குறித்து தம் ட்விட்டர் பக்கத்தில்கருத்து தெரிவித்துள்ளார்.ஒருசில ரசிகர்கள் சமந்தா முன்பை விட அழகாக உள்ளார் என்கின்றனர்.

சமந்தா கண்ணீருடன் உருக்கமான பதில்
 

Tags :

Share via