டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுக்கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சிபிஐ வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அதே வழக்கில் ஜாமீன் கோரியும் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. கெஜ்ரிவாலின் மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா தள்ளுபடி செய்தார். ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகலாம் என்று நீதிபதி பரிந்துரைத்தார்.
Tags :