“திட்டங்களை செயல்படுத்த முடியாததற்கு இதுதான் காரணம்” முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் பேசுகையில், “திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாததற்கு மாநில அந்தஸ்து இல்லாதது தான் காரணம். மற்ற மாநிலங்களில் இந்த சிரமம் கிடையாது. ஆட்சி பொறுப்பிலிருந்து பார்க்கும்போது தான் எத்தனை சிரமங்கள் உள்ளன என்பது தெரியும். மாநில அந்தஸ்துக்காக டெல்லி செல்லலாம். நாடாளுமன்றத்தில் புதுச்சேரி எம்பி,க்கள் குரல் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
Tags :