அடுத்தடுத்த வீடுகளில் நகை திருட்டு

by Admin / 02-09-2021 03:22:53pm
அடுத்தடுத்த வீடுகளில் நகை திருட்டு

திருச்சியில் அடுத்தடுத்த வீடுகளில் நகைத்திருட்டில் ஈடுபடும் ஆசாமியை போலீஸ் தேடி வருகின்றனர்.
 
திருச்சி மாவட்டம்   உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சிறுநாவலூர் ஊராட்சி இந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் நடராஜன் விஜயலட்சுமி தம்பதியினர் பெட்டிக்கடை நடத்தி வரும் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொழில் விஷயமாக வெளியூர் சென்று இருந்தார்.

தனியாக இருந்த விஜயலட்சுமி   தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில்  கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமி விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்கும் போது தலை முடியில் சிக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்து விஜயலட்சுமி எழுந்தபோது  கையில் இரும்பு கம்பியுடன் நகைகளை பறித்து கொண்டு தப்பிஓடியுள்ளார் .

 வீட்டின் வெளியே வந்து விஜயலட்சுமி திருடன் திருடன் என கத்தியுள்ளார். அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது மர்ம ஆசாமி இருட்டில் மறைந்து விட்டார்.
 
மேலும் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் பணிபுரியும் கணபதி என்பவரது வீடு மற்றும் காயத்ரி கவியரசன் ஆகியோர் வீடுகளிலும் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொப்பம்பட்டி யில் கோயிலில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உப்பிலியபுரம் பகுதிகளில் திருட்டு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

 

Tags :

Share via

More stories