முதல்வர் தனிப்பிரிவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் - தமிழக அரசு

by Editor / 02-09-2021 10:24:06am
முதல்வர் தனிப்பிரிவில்  கூடுவதை தவிர்க்க வேண்டும் - தமிழக அரசு

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தனிப்பிரிவு செயல்படுகிறது. இங்கு தினமும் பொது மக்களிடம் பெறப்படும் மனுக்கள், மாவட்டங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சமீப காலங்களில், இலவச வீடு ஒதுக்கீடு கோரி, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், நீண்ட வரிசையில் மனுக்கள் அளிக்க காத்திருக்கின்றனர். இதனால், கொரோன வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில், தொய்வு ஏற்பட்டுள்ளது. முதல்வர் தனிப்பிரிவில், நேரடியாக மட்டுமின்றி, www.cmcell.tn.gov.in என்ற இணையதளம், cmcell@tn.gov.in என்ற, 'இ - மெயில்' முகவரி மற்றும் தபால் வழியாகவும், முதல்வர் உதவி மையமான, cmhelpline.tnega.org வாயிலாகவும் மனு பெறப்படுகிறது. அனைத்து மனுக்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும். எனவே, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில், முதல்வர் தனிப்பிரிவில் ஆயிரக்கணக்கில் கூடுவதை தவிர்க்க வேண்டும். இணையவழி சேவைகளை பயன்படுத்தி பயன் பெறவும்.

 

Tags :

Share via