கவர்ச்சிகரமான வட்டி விளம்பரம்-தனியார் நிதி நிறுவனத்தில் காவல்துறை விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் தெருவில் செயல்பட்டு வரும் ஆருத்ரா தங்க நகை சேமிப்பு திட்ட நிதி நிறுவனத்தில் இன்று மாவட்ட மத்திய குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிறுவனத்தில் 1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ 30ஆயிரம் ரூபாய் என 12 மாதங்களுக்கு வட்டி வழங்குவதாகவும் ஊக்க பரிசாக 1கிராம் தங்கம் வழங்குவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பு வழங்கியதின் பேரில் அந்நிறுவனத்தில் மாவட்ட மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தி வருவதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : Attractive Interest Advertising-Police Investigation in Private Financial Institution