ராஜாஜி மருத்துவமனை எங்கே செல்லும் இந்த பாதை
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடியவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இந்த மருத்துவமனை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது . இந்த மருத்துவமனை வளாகத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட துறைகள் மூலம் அதிநவீன சிகிச்சைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு 10க்கும் மேற்பட்ட தென் மாவட்டங்களில் இருந்து தினமும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்களுடைய தாய், தந்தை வீட்டில் உள்ள வயதானவர்களை சிகிச்சைக்காக அழைத்து வந்து மருத்துவமனை வாசலில் மற்றும் மருத்துவமனை அருகில் விட்டு செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கடந்த 2 மாதங்களில் மட்டுமே மருத்துவமனை வளாகத்திலும்,மருத்துவமனை சுற்று வட்டாரத்திலும் கேட்பாரற்று இறந்த நிலையில் 8 ஆண் சடலம் மற்றும் 1பெண் சடலம் என மொத்தம்9பேரின் உடல்களை காவல்துறை மாநகராட்சியின் உதவியோடு மீட்டுள்ளது. . இறந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் இறந்தவர்கள் அனைவருமே முறையாக உணவு, சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tags :