.யோசிக்க வேண்டிய கட்டத்தில், காங்கிரஸ்,........இன்னொரு இயக்கத்தோடு கைகோர்க்கும் முயற்சியா ஜனநாயகன் பற்றிய கருத்து...
ஒர் உச்சபட்ச நடிகரின் திரைப்படம் அரசியல் சார்போடு வெளிவரக்கூடிய நிலையில்.., அது தணிக்கையின் காரணமாக சில நிபந்தனைக்கு உட்பட்டு ..படக்குழு நிச்சயித்த தேதியில் வெளிவராமல் போகும் சூழலில் ..நீதிமன்றத்தை நாடும்பொழுது நீதிமன்றமும் சில விதிமுறைகளை சொல்கிறது..
அதனைத் தொடர்ந்து பட வெளியீட்டுக்கான தேதி தள்ளி வைக்கப்படுகிறது... அதற்காக,
தேசிய அளவிலான ஒர் இயக்க வியூக வகுப்பாளர், மூன்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது....
என்ன மாதிரியான ஆதரவு படத்தின் நாயகனுக்கு வழங்குகிறார்கள்... அவரோடு ,அவர் இயக்கத்தோடு நெருங்கி செல்வதற்கான ஒரு வழியா..
.
இல்லை, கூட்டணியில் அதிக இடங்களை பெறுவதற்கான முயற்சியால்... இல்லை, ஆட்சி அமைந்தால் அதிகாரத்தில் பங்கு வருவதற்கான ஏற்பாடா என்பதான கேள்விகள்
இன்று காலையிலிருந்து எல்லோரிடமும் எழுகின்ற ஒரு கேள்வி.
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த பொழுது..அந்தக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கிற குரல் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியிடம்வெளிப்பட்டதை அடுத்து தமிழக மட்டத்திலிருந்து அதுபோன்ற எந்த குரல்களும் கேட்கப்படவில்லை. ஆனால் இன்றைக்கு இந்த திரைப்படம் வெளிவருவதின் மூலமாக சமுதாயத்தில் மாபெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுவிடும் என்கிற மாதிரியான நிலைப்பாட்டில் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இதற்கு முன்பு எத்தனையோ திரைப்படங்கள் முடங்கி கிடந்திருக்கின்றன .அது பற்றியெல்லாம் இப்பொழுது பேசுகின்ற அரசியல் சார்பாளர்களிடமிருந்து ...தணிக்கை குழு மீதான விமர்சனங்கள் வைக்கப்படவில்லை .ஆனால் ,இன்றைக்கு தி.மு.க கூட்டணியில் இருந்து தமிழக வெற்றி கழகத்தை நோக்கி காங்கிரஸ் நகர்வதற்கான மறைமுக ஒரு முயற்சி நடக்கிறதோ என்கிற பேச்சு சமீப காலமாக இருந்து கொண்டிருந்த நிலையில்,
இப்பொழுது அது, திரைப்படத்தை மையப்படுத்தி ஆதரவு குரலாக வெளி படுத்த பட்டிருப்பது உண்மையில் யோசிக்க வேண்டிய விஷயமாகப்படுகிறது.
தி.மு.கவை, இந்த ஆதரவு குரல் மூலம் பயமுறுத்தி கூட்டணிக்குள் அதிக இடங்களை பெறுவதற்கான முயற்சியாக இது அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
டெல்லிக்கு தெரியாமல், ஒரே நேரத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் வலைதள பதிவு எப்படி வந்திருக்க முடியும் என்கிற கேள்வியும் எழுந்து கொண்டிருக்கிறது.
கூட்டணி வலுவாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு ...இன்னொரு இயக்கத்தோடு கைகோர்க்கும் முயற்சி சரியானதுதானா... என்பதை யோசிக்க வேண்டிய கட்டத்தில் காங்கிரஸ் உள்ளது.
எங்களால்தான் திமுக பலம் பெற்று இருக்கிறது என்கிற கருத்தை காங்கிரஸ் வைத்திருந்தால், தி.மு.கவில் கூட்டணி வைத்ததனால் தான் தமிழ்நாட்டில் இத்தனை எம்.எல்.ஏக்களும் எம்.பி களும் உருவாக முடிந்தது என்பதையும் அவர்கள் உணர தலைப்பட வேண்டும்.
தனித்து காங்கிரஸ் நின்றால், எத்தனை ஓட்டுக்களை பெறும் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். தி.மு.கவோடு இருப்பது தான் காங்கிரசின் பலமே தவிர ...புதிதாக தோன்றியுள்ள.. ஒரு கட்சி வேகம் எடுப்பதாக நினைத்துக் கொண்டு.. இன்னும் முழுமையாக கட்டமைக்கப்படாத அந்த கட்சியோடு காங்கிரஸ் சேர்ந்தால், இன்றைக்கு இருக்கிற பலவற்றையும் ...பின்னர் பெற முடியாமல் போகலாம்..
சந்தர்ப்பத்திற்கு தக அரசியல் களத்தில் விளையாட நினைப்பது ஆபத்தை தான் உருவாக்கும்.
தன் கூட்டணியில் உள்ள பிரதான கட்சி தி.மு.க ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற கட்சி, அதைஎதிரியாக பார்க்கும் ஒரு புதிய கட்சியின் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி இது போன்று குரல் கொடுப்பது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
திரைப்படம் வெளிவராமல் போனதற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மத்திய அரசுதான் இதற்கு காரணம். விஜயை இந்த படத்தின் மூலம்.. அதுவும் தணிக்கையின் மூலமாக ,தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடலாம் என்று நினைப்பதாக சொல்வதெல்லாம் வேடிக்கையாக உள்ளது.
வன்முறையை -சமூக ஒழுக்க நெறியை குலைக்க கூடிய காட்சிகள் இருக்கிற பட்சத்தில் மட்டும்தான் தணிக்கை குழு அவற்றை மறு பரிசீலனை செய்ய சொல்லும். மற்றபடி, அங்கே அரசியல் என்பது ஆதிக்கம் செலுத்துகிறதா.. என்றால், அது முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜனநாயகனோடு சேர்ந்து தான் பராசக்தி படமும் இன்னும் தணிக்கை செய்யப்ப்படவில்லை ..
மத்திய அரசு தணிக்கை குழுவை தன் கட்டுப்பாட்டில் வைத்து ..தனக்கு பிடிக்காத படத்தை வெளியிட பிரச்சனையை உருவாக்குகிறது என்று சொல்லுவது தப்பிதமாகவே உள்ளது..
ரத்தம் கொப்பளிக்க..இரும்பு ஆயுதங்களோட இளந்தலைமுறையினாிடையே வன்முறையை கட்டவிழ்க்கும் காட்சிகள் இடம் பெறாமல் பாா்ததுக்கொள்ளும் தாா்மீக சமூக பொறுப்பு வெகுஜனசக்தியை கையாளும் திரையினருக்க வேண்டியது அவசியம்.
Tags :



















