தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

by Admin / 09-01-2026 12:32:57am
 தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தலைமையில் கிண்டி தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆளுநர் அவரது குடும்பத்தினர் வேட்டி சட்டை மற்றும் புடவை அணிந்திருந்தனர்.வண்ணக் கோலங்கள் இடப்பட்டு மண்பானைகளில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு வழிபாடு செய்தனர். விழாவில் தமிழக பாரம்பரிய கரகாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo