சோட்டானிக்க்கரை பகவதி அம்மன் திருக்கோவில்

by Admin / 15-08-2022 02:25:01am
 சோட்டானிக்க்கரை பகவதி அம்மன் திருக்கோவில்

கேரளா  மாநிலத்தில்  எர்ணாகுளத்தில்  வீற்றிருந்து  அருள்பாலிக்கும்  சர்வ வல்லமை பொருந்திய தெய்வம் தான் சக்தி பகவதிஅம்மன் .மாசிமாதம் ,நவராத்திரி, கார்த்திகை, அமாவாசை ,பெளர்ணமி களில் அம்பாளை  நாடி வருபவர்களுக் கு சர்வ நன்மைகளையும்  அள்ளி வழங்ககூடியவளாக  ...ஒரு நாளின்  மூன்று  பொழுதுகளில்  வெள்ளை ,சிவப்பு, நீலம் என வஸ்திரங்களை  அணிந்து  பக்த கோடிகளுக்கு  காட்சி நல்கி ..வலது  கையை பாதத்தில் வைத்து இடது  கை வழியாகஅருள்  பாலிக்கிறாள்  அன்னை பகவதி. ..திருமணம் ஆகாதருக்கு திருமணமும்  பிள்ளை வரம் வேண்டி  வருவோருக்கு  பிள்ளையும்  பில்லி  சூனியம்  வைத்து வாழ்க்கை இழந்தோருக்கு   அப்பொல்லாத மனிதர்களின் தீயசக்தியை அழித்துபொன்னும் பொருளோடு புகழோடு  வாழவைப்பாள்  புன்னகை  தவழும்  பூவழகி  பகவதி...சோட்டானிக்கரையில் பகவதி எப்படி எழுந்தருளினாள்.... .இதோ... .ஆயிரமாயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பு   சோட்டானிக்
கரை  பெரும்  வனமாக  இருந்தது.  அக்காட்டில் பழம்குடியான  ஆதிவாசி கூட்டமே  வசித்து வந்தது. இவர்களை  வழி நடத்திச் செல்ல கண்ணப்பன்  எனு ம் கொடும் அரக்க  குணம் கொண்டவன் இவர்களுக்கு  தலைவனாக  இருந்தான். இவன் பசுக்களை  கவர்ந்து வந்து புசிப்பதில் அதிகம் நாட்டம்  கொண்டவன். ஒரு தினம்  இப்படித்தான் ஒரு பசுவைக் கொல்ல ..விரட்டி,செல்கையில் அப்பசு  இவனிடமிருந்து  தப்பித்து ஒடி காட்டுக்குள்  ஒழிந்து  கொள்ள....விரக்திக்குள்ளான கண்ணப்பன் திரும்பி வீட்டிற்கு வர..அப்பசு அவனின் செல்ல மகளிடம் அடைக்கலம் புகுந்து...நிற்க..பசுவை க்கண்டவன்  அதை வெட்டும் நோக்கில் வர..அதைக்கண்ட அவன் மகள் தந்தையிடம் அப்பசு தன்னிடம் அடைக்கலம் புகுந்ததால் அதைக்கொல்ல வேண்டாம் என வினவ மகள் மேல் கொண்ட பாசத்தால் பசுவைக் கொல்லாது விடுகிறான். அந்நாளிலிருந்து அவன் உயிர்களை  கொல்வதை நிறுத்திவிட...முன்சூழ்ந்த பாவம் முற்றத்தில்  நின்று அவன்மகளை கூற்றுவன்  கொண்டு போய்விட்டான்.மகளை இழந்து தவித்த கண்ணப்பன்   கனவில் அவன் உயிர்பிச்சை தந்த பசு கனவில்  தோன்றி...நான்தான்  பகவதிதேவி  என்றும் நாளை ஒரிடத்தில் சிலையாகஇருப்பேன் என்றும் அங்கே மகாவிஷ்ணு  சிலையும் இருக்குமென்று சொல்ல. .மறுநாள் கண்ணப்பன்  சென்று பார்க்க. ..சொன்ன மாதிரி சிலையை கண்டவன்.அங்கே குடசை வடிவில் கோவில் கட்டி வழிபட்டான் .ஒருகட்டத்தில்  கண்ணப்பன்  இறந்து பட..அவன் கூட்டம் வேறு பகுதிகளுக்கு  இடம் பெயர்ந்து   சென்று விட..  பல காலம் அங்கு விக்ரக   வழிபாடு  நடத்தப் பெறவில்லை .இநிநிலையில்ஒருபெண் புல் அறுக்கும் பொழுது சிலைமீது அரிவாள்பட்டு ..ரத்தம்  சிலையிலிருந்து  பீறிட்டு வர.  அவள் பயந்து போய் ஆன்மீக பெரியோரிடம் சொல்ல.. செல்ல அவர்கள் வந்து விக்ரகத்திற்கு பூஜை, புனஸ்காரம் செய்ய...அங்கு அன்று நிலை கொண்டு  அருள்பாவித்து வருபவள்தான் அன்னை பகவதி..
 சோட்டானிக்க்கரை பகவதி அம்மன் திருக்கோவில்
 

Tags :

Share via