எழுபத்து ஐந்தாவது ஆண்டு- வீர நடை போடும் நாள் இன்று. எம் தேசம் இனியது.

by Admin / 15-08-2022 01:22:08am
 எழுபத்து ஐந்தாவது ஆண்டு- வீர நடை போடும் நாள் இன்று.    எம் தேசம் இனியது.

75 -வது சுதந்திரதினவிழா கோலாகலமாக ஆரம்பம்.
இந்தியா ஓர் அற்புதமான நாடு .  பலமொழிகள் ,கலாச்சாரங்கள், ஒருங்கிணைந்த பண்பாட்டுக் கூறுகள்  கொண்ட  வேற்றுமையில்   ஒற்றுமை கொண்ட தேசம்  .புராண-இதிகாசங்களின் கட்டமைப்பில்   வேரூன்றி  வளர்ந்திருந்தாலும் சாதி-மத வேறுபாடுகளை  கடந்தும்   மனித மாண்புகளுக்கு   மதிப்பளிக்கும்   தேசம் . இது  போன்ற தொரு   தொன்மையான
நாடு    பூமி   பந்தில்    குறைவு தான்  . லட்ச கணக்கான  ஆண்டுகள்  கொண்ட  நீள்  வரலாற்று ,சமூக  பின்னணி  கொண்ட மண்   .பாண்டவர்- கெளரவர் என பங்காளி  சண்டையையும்  இன்னொருவர்  மனைவியை  கவர்ந்தவன்  மன்னனாக இருந்தாலும் மாண்பு குறைந்து மாண்டுபோவான்  என்பதற்கு  நாடு கடந்து  நீதீயைப்போதித்து  நெறியோடு  வாழ்ந்த தேசம் .முன்னூறு ஆண்டுகளுக்கு  மேலாக பிரிட்டிஷ் ,பிரஞ்சு, போர்த்துகீசியர் ,டச்சுக்காரர்  என அன்னியரகளிடம்  அடிமை கொண்டுசாத்வீக  அடிப்படையில்  வெற்றி  கொண்ட  தேசம் ...எழுபத்து  ஐந்து ஆண்டுகளில்  உலக வல்லரசுகளுக்கே  சவால்விடும் அளவிற்கு  வளமார்ந்து  வளர்ந்து  செம்மாந்து நிற்கும்  எம் தேசம்..   இந்தியா    ..ஒவ்வொரு  இந்தியனின்  நாடி நரம்புகளில் தேசபற்று எனும்  ரத்தம் பொங்கி பிரவாகிக்கும்  மக்களைக்கொண்ட  இந்தியாவின்   எழுபத்து  ஐந்தாவது ஆண்டு வீர நடை போடும்நாள் .. .இன்று. எம் தேசம்  இனியது.

 எழுபத்து ஐந்தாவது ஆண்டு- வீர நடை போடும் நாள் இன்று.    எம் தேசம் இனியது.
 

Tags :

Share via