பவன் கல்யாணுக்கு எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து

ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலை நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சந்தித்தது. அந்த வகையில், பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட்ட பவன்கல்யாண் 70ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பவன் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா பதிவு வெளியிட்டுள்ளார்.
Tags :