வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags :