நவீன இந்தியாவின் அடித்தளம்.. செல்வப்பெருந்தகை அஞ்சலி

by Editor / 27-05-2025 01:19:54pm
நவீன இந்தியாவின் அடித்தளம்.. செல்வப்பெருந்தகை அஞ்சலி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் எக்ஸ் பதிவில், "வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற கனவுடன், நேரு தனது தொலைநோக்குப் பார்வை கொண்டு சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை நிறுவுவதில் அவரது பங்களிப்பு மிகச்சிறந்தது" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via