லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2

by Editor / 13-09-2021 02:38:45pm
லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.2

லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் லடாக்கில் கார்கில் பகுதி அருகே இன்று(திங்கள்கிழமை) காலை 9.16 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 எனப் பதிவாகியுள்ளது.

லே பகுதிக்கு தென்மேற்கே 89 கிமீ தொலைவிலும் 5 கிமீ ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

 

Tags :

Share via