அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க யாராலும் முடியாது -அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

by Admin / 05-01-2026 11:23:28am
அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க யாராலும் முடியாது -அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்அதிமுகபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. திமுக ஒரு மக்கள் நல கட்சி அல்ல அது ஒரு குடும்பத்தால் நடத்தப்படும் கார்ப்பரேட் நிறுவனம் என்றும் கட்சியின் தலைமை வணிகர் அளவிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் திமுக அரசு அறிவித்துள்ள புதிய பென்ஷன் திட்டம் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாதவை மறைக்க செய்யும் ஒரு தேர்தல் நாடகம் வேண்டும் அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல் என்றும் விமர்சித்து உள்ளதோடு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றதை சுட்டிக்காட்டி உழைப்பால் உயராத வாரிசு அரசியல் திமுகவில் நடப்பதாக விமர்சித்ததோடு தமிழகம் கடன் சுமையில் முதலிடத்தில் இருப்பதாகவும் மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுவதாகவும் குறிப்பிட்டு குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் நிரந்தர டிஜிபியை இதுவரை நியமிக்காமல் திமுக அரசு உள்ளதாகவும் கஞ்சா மற்றும் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நலத்திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டதாகவும் அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுக்க யாராலும் முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அதிமுகவால் கொண்டுவரப்பட்ட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்தை பெயர் மாற்றி திமுக அரசு செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories