மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

by Admin / 05-01-2026 02:54:58pm
 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

இன்று திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். 1008 பொங்கல்  பானைகளில் பெண்கள்  பொங்கல் வைக்க மத்திய அமைச்சர் அமித்ஷா பொங்கல் பானையில் அரிசி எட்டு விழா தொடங்கி வைத்தார்

. அவருடன் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், மாநிலத் தலைவர் நயினாா் நாகேந்திரன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சி தமிழக கலாச்சார வழியாக அரசியல் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

 பொங்கல் பண்டிகை கொண்டாடிய அமைச்சர் நேராக தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று   தலைமை தாங்கி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பஙகீடு குறித்த பேச்சு வார்த்தை நடத்தினார். இரண்டாவது நாளாக அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் தமிழக பாஜக மேலிட தொடர்பாளர் பியூஸ் கோயல், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் உட்பட பாஜகவின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
 

Tags :

Share via

More stories