மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. இருவர் சுட்டுக்கொலை

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது. தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள பல்லேல் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இராணுவ மேஜர் ஒருவரும் மூன்று பொலிசாரும் அடங்குவர். சம்பவம் நடந்த பகுதியில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மணிப்பூர் மாநிலம் நான்கு மாதங்களாக மெய்தி, குக்கி ஆகிய பழங்குடி இனங்களுக்கிடையேயான மோதல்களால் பதற்றத்தில் உள்ளது.
Tags :