சபரிமலையில்  நிறை புத்தரிசி பூஜை

by Editor / 16-08-2021 05:01:31pm
சபரிமலையில்  நிறை புத்தரிசி பூஜை


ஆவணி மற்றும் ஓணப் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 
 திறக்கப்பட்டது. தொடர்ந்து  (16ம் தேதி) நிறை புத்தரிசி பூஜைகள் நடந்தது. விவசாயம், நாடு செழிக்கவும் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதற்காக மேல்சாந்தி ஜெயராஜ் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்தார். முன்னதாக கோயில் அருகே அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் 18ம் படிக்கு கீழ் கொண்டு வைக்கப்பட்டன.

அதன் பிறகு மேல்சாந்தி, அர்ச்சகர்கள் நெற்கதிர்களை தலையில் சுமந்தபடி 18ம் படி வழியாக கோயில் முன்புள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். 5.55-6.20க்கு மணிக்குள் நிறை புத்தரிசி பூஜைகள் தந்திரி மகேஷ் மோகனர் தலைமையில் நடைபெற்றன. ெதாடர்ந்து இன்று முதல் 8 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க படுகின்றனர். அதுவும் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். ஆவணி மற்றும் ஓணம் சிறப்பு பூஜைகளுக்கு பின் வரும் 23ம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படுகிறது.

 

Tags :

Share via