போக்குவரத்து பணிமனைக்குள் அமர்ந்து ஓட்டுநர் நூதன போராட்டம்.

தேனி மாவட்டம் தேனி போக்குவரத்து பணிமனையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டுனராக பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் என்பவர் 5 ஆண்டுகளாக சீருடை வழங்காததை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின் தற்போது வழங்கப்பட்ட சீருடைக்கு தையல் கூலி தரப்படாததால் சீருடையாக வழங்கப்பட்ட காக்கி துணியை வேட்டி போல கட்டிக் கொண்டும், உடலில் போர்த்திக் கொண்டும் பணிக்கு வந்துள்ளார்.இன்று கிளை மேலாளர் அவருக்கு பணி வழங்க மறுத்ததால் தற்போது போக்குவரத்து பணிமனைக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Tags :