செங்கோட்டை-நெல்லை-செங்கோட்டை ரயில்கள் ரத்து.

by Editor / 16-02-2023 08:47:55am
செங்கோட்டை-நெல்லை-செங்கோட்டை ரயில்கள் ரத்து.

நெல்லை செங்கோட்டை வழித்தடத்தில் மின் மயமாக்கல் பணி நடைபெறுவதால் இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நெல்லையிலிருந்து செங்கோட்டை வரை மின் மயமாக்கல் பணி நடைபெறுவதால் செங்கோட்டையிலிருந்து காலை 10-25 மணிக்கு கிளம்பி திருநெல்வேலி வரும் வண்டி எண் 06684 இன்று 16 2 2023 முதல் அடுத்த மாதம் 6 3 2023 வரையிலும்  மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து  மதியம் 1.50 மணிக்கு கிளம்பி செங்கோட்டை செல்லும் ரயிலும் இன்று முதல் அடுத்த மாதம் ஆறாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

 

Tags :

Share via