ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தம்..!!

by Admin / 08-08-2021 01:27:48pm
ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தம்..!!

 

ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தம்..!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாக, ராகுல் காந்தியின் பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

அதுவரைக்கும் அவர் தமது மற்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பார் என்றும், நமது மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, அவர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவார் எனவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via