அதிமுகவுடன் கூட்டணி இல்லை: டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் அமமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக ஆட்சியின்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சிகளை கலைத்தனர். கோடநாடு வழக்கில் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். சமீபத்தில் ஓபிஎஸ் அணியுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருப்பதாக டிடிவி தினகரன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags :