விஐபியாக மாறிய சேவல் - 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

by Staff / 27-01-2024 12:53:37pm
விஐபியாக மாறிய சேவல் - 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் சேவல் சண்டையில் ஈடுபட்டு படுகாயமடைந்த சேவல் ஒன்று தற்போது காவல்துறையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகவும் அது மாறியுள்ளது. முதலில் காயமடைந்த சேவலை கால்நடை மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். சேவல் சண்டைக்கு ஏற்பாடு செய்த 3 பேர் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காயமடைந்த சேவலுக்கு தேவையான பராமரிப்பு, சிகிச்சை மற்றும் உணவு ஆகியவற்றை போலீசார் தற்போது அளித்து வருகின்றனர். அதைக் கவனிக்க ஒரு போலீஸ்காரரும் நியமிக்கப்பட்டுள்ளார். சேவல் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்.

 

Tags :

Share via

More stories