மே மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்

by Editor / 09-05-2021 07:09:29pm
மே மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்

 


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மே) மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வருகிற 13-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம், 14-ந்தேதி அட்சய திரிதியை, பரசுராமர் ஜெயந்தி. 16-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் தொடக்கம், 17-ந்தேதி சங்கராச்சாரியார் ஜெயந்தி, 20-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை பத்மாவதி பரிநய உற்சவம், 22-ந்தேதி வரதராஜசாமி ஜெயந்தி, 25-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் சாத்துமுறை, நரசிம்மர் ஜெயந்தி, தாளப்பாக்கம் அன்னமாச்சார்யார் ஜெயந்தி, தறிகொண்டா வெங்கமாம்பா ஜெயந்தி.உற்சவம் ஆகியன நடக்கிறது

 

Tags :

Share via