மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை நாலு மணி முதல் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு 7 40 மணி முதல் 8 10 மணிக்குள் மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் சன்னதியில் தங்க விமானங்கள் ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இவ்விழாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவில் மேல் மாடத்தில் ஒன்பதாயிரம் பேர் வரை அமர்ந்து தரிசனம் செய்தார்கள். 6500 க்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதோடு பக்தர்களின் பாதுகாப்பிற்காக 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டதோடு குடமுழுக்கு காண வந்திருந்த மக்களுக்கு வயிற்றுப் பசியை போக்கும் முகமாக அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலுக்கு அரசு மற்றும் உபயதாரர்களின் வழியாக பெறப்பட்ட 32.29 கோடி செலவில் இந்த குடமுழுக்கு விழா நிகழ்த்தப்பட்டது.
Tags :


















