ஓமானில் அமெரிக்காவுடனான சமீபத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை  நல்ல தொடக்கம்

by Admin / 07-02-2026 09:48:04am
 ஓமானில் அமெரிக்காவுடனான சமீபத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை  நல்ல தொடக்கம்

நேற்று மஸ்கட்டில் நடைபெற்ற   பேச்சுவார்த்தைகள் குறித்து  ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஓமானில் அமெரிக்காவுடனான  சமீபத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை  நல்ல தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளளாா். ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த எதிர்காலப் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. ஈரான் தரப்பில் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும், அமெரிக்கத் தரப்பில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்மற்றும்  அதிபர்  டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் பங்கேற்றனர் . இப்பேச்சுவார்த்தை ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதாகவும், ஏவுகணைத் திட்டம் அல்லது பிராந்தியக் குழுக்களுக்கான ஆதரவு குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும்  ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.  இரு தரப்பினரும் தங்கள் நாட்டுத் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான  கடந்த கால மோதல்கள் மற்றும் ஈரானில் நிகழ்ந்த உள்நாட்டுப் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெறும்  முதல் முக்கிய  முன்னெடுப்பு இதுவாகும்.  ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தையை உறுதி செய்ய ஓமன் ஒரு நடுநிலையான மத்தியஸ்தராகச் செயல்பட்டது. 
 

 

Tags :

Share via