லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது

ராஜஸ்தான் மாநிலத்தில், லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏலச்சீட்டு மோசடி வழக்கில் சிக்கியவர்களை கைது செய்யாமல் இருக்க, அமலாக்கத்துறை அதிகாரிகள் நவல் கிஷோர், பாபுலால் ஆகியோர் ரூபாய் 17 லட்சம் லஞ்சம் கேட்டு அதில் 15 லட்சத்தை பெற்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புப் போலீசார் இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
Tags :