பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் குறித்து உரையாற்றினார்.

by Admin / 24-03-2026 12:16:49am
பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் குறித்து உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் குறித்து உரையாற்றினார். ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வினயோகத்தில் சவால்கள் இருப்பதை பிரதமர் முன்வைத்தார். இந்தியாவின் 60% சமையல் எரிவாயு தேவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுவதால் தற்போது நிலவும் நிச்சயமற்ற சூழலில் வீட்டு உபயோக எரிவாயு நுகர்வோருக்கு முன்னுரிமை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போர் தொடங்கியதில் இருந்து ஈரான் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளான. நாடுகளில் இருந்து எதுவரை சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர் .ஈரானில் இருந்து மட்டும் சுமார் 1000 இந்தியர்கள் கேட்கப்பட்டுள்ளனர். இதில் 700க்கும் மேற்பட்டோர் இளம் மருத்துவ மாணவர்கள் அவர் வளைகுடா நாடுகளில் வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் தெளிவு படுத்தினார் .வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய பள்ளிகளில் படைக்கு மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்சி .10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளை ரத்து செய்துள்ளதோடு அவர்களின் கல்வி தடை இன்றி தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார் .கோவில் 19 பெரும் தொற்று காலத்தைப் போலவே தற்போதைய நீண்ட கால உலகளாவிய நெருக்கடியையும் நாடு ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார் .உரங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் இறக்குமதி ஆதாரங்களை இந்தியா ஏற்கனவே 27 லிருந்து 41 நாடுகளாக விரிவுபடுத்தி உள்ளதால் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். நம் பாராளுமன்றம் இந்த விவகாரத்தில் ஒருமித்த குரலில் உலகுக்கு செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

Tags :

Share via

More stories