அண்ணா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள புகைப்படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், திரளான அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Tags :