விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்.

by Editor / 18-09-2023 09:43:10am
விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்.

இந்துக்களில் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகை விநாயகர் சதுர்த்தி விழா.இந்தியா முழுவதும் இன்று கோலாகலக் கொண்டாடப்படுகிறது. இதனால், படையல் பொருட்கள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான  பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகள் விதவிதமாக தயார்செய்யப்பட்டுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.புல்லட் விநாயகர் முதல்  ‘சந்திரயான் 3’ ராக்கெட் வடிவில் விநாயகர் சிலை உள்ளிட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு இன்று பூஜிக்க கொண்டுசெல்லப்பட்டுவருகிறது.புதுச்சேரி,பிள்ளையார்பட்டி உள்ளிட்ட நாட்டிலுள்ள ஏராளமான  பிரசித்தி பெற்ற ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடந்துவருகின்றன.

 

Tags : விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்.

Share via