இன்று விநாயகர் சதுர்த்திப் பண்டிகை
விநாயகர் சதுர்த்தி -கணேச உற்சவம் என்று அழைக்கப்படும் இப் பண்டிகை முழு முதல் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகரின் பிறப்பின் அடிப்படையாகக்கொண்டு கொண்டாடப்படும் பண்டிகையாகும் ..வீடுகளில் களிமண்ணால் வார்க்கப்பட்ட சிலைகளை கொண்டு பண்டிகை கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு பிடித்தமான அவல்,பொரிகடலை , மோதகம் போன்ற படையல்களை வைத்து அவரை வழிபடுகிற நிகழ்வு நடைபெறும். பத்து நாட்கள் ,இப் பண்டிகையானது நடைபெறுகிறது .பத்தாவது நாளில் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு அனந்த சதுர்த்தி நாளில் ஆறு அல்லது கடல்களில் ,நீர் நிலைகளில் விநாயகரை கரைத்து விடுகின்ற நிகழ்வு நடந்தேறும். இந்தியா மட்டும் அன்று உலகத்தில் இந்து மதம் சார்ந்திருக்கின்ற அனைவராலும் விநாயகர் சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி ஆனது பொது இடங்களில் வைத்து வழிபடுகின்ற நிலை பால கங்காதர திலகர் நிகழ்த்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Tags :



















