வடிவேலு தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் (எ) பாப்பா, மதுரை விரகனூரில் நேற்று (ஜன.18) இரவு உடல் நலக் குறைவால் காலமானார். இதற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “இந்த செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். 'வைகைப் புயல்' வடிவேலுவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags :