கேரளா இளைஞர்கள் சாதனை

டெல்லி நொய்டாவில், உலக ரோபோடிக்ஸ் சாம்பியன்ஷிப் 2023 660TM போட்டி நடைபெற்றுள்ளது. அதில், கேரள மாநிலத்தை சேர்ந்த மிதுன், அகில், நிவேத், கமலேஸ்வரன் ஆகிய பொறியாளர்கள் தயாரித்த மனித உருவ ரோபோவுக்கு சர்வதேச அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது. உலகில் எந்த இடத்தில் இருக்கும் மருத்துவர்களையும் தொடர்பு கொண்டு, நோயாளியை பராமரிக்க செயற்கை நுண்ணறிவு உள்ள இந்த ரோபோவுக்கு, 'செவிலியர் லுாசி' என பெயரிட்டனர். இந்த கேரள இளைஞர்களின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Tags :