டெங்கு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை: மா. சுப்பிரமணியன்

by Staff / 17-09-2023 01:40:51pm
டெங்கு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை: மா. சுப்பிரமணியன்

டெங்கு குறித்து பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மாநிலஅளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான கலந்தாய்வு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்தது. கூட்டத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.தமிழக சுகாதாரத்துறையில் 12, 000 மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளன. மருத்துவக் கட்டமைப்புகள் முழுமையாகும் வகையில் சுகாதாரமான சூழ்நிலையில் பராமரிக்க வேண்டுமென்ற கருத்துகள் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. நிச்சயம் இந்த ஆண்டும் டெங்கு பாதிப்பு என்பது பெரிய அளவில் உயரவில்லை என்கிற நிலை இருக்கும். டெங்குவால் பெரிய அளவிலான அச்சம் கொள்ளும் நிலை இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும். எனவே டெங்குகுறித்து பெரிய அளவில் அச்சம்கொள்ள தேவையில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via