சென்னையில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ பாதிப்பு
'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவுவதால் சென்னையில் பள்ளி மாணவா்கள் 12 லட்சம் பேருக்கு கண் பரிசோதனையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து செப். 25-ஆம் தேதி வரை 10 நாள்கள் இந்தப் பரிசோதனை நடைபெறவுள்ளது. சென்னையில் 'மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் வேகமாகப் பரவி வருகிறது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் தினமும் 100-க்கும் மேற்பட்டோா் இந்த நோய் பாதிப்புக்கு சிகிச்சைக்கு செல்கின்றனா்.சென்னை எழும்பூா் அரசு கண் மருத்துவமனைக்கு தினமும் 50 போ சிகிச்சைக்கு வருவதால், மருத்துவமனையில் சிறப்பு வாா்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 12 லட்சம் மாணவா்களுக்கு சனிக்கிழமை (செப். 16) முதல் 25-ஆம் தேதி வரை கண் பரிசோதனை செய்யப்படுமென தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை தியாகராய நகரில் உள்ள செ. தெ. நாயகம் தியாகராய நகா் மேல்நிலைப் பள்ளியில் 'மெட்ராஸ் ஐ' கண் பரிசோதனை தொடா் முகாமை அமைச்சா் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தாா்.
Tags :