Google Map-ஆல் ஏற்பட்ட கார் விபத்து.. 2 இளம்பெண்கள் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் கார் ஓட்டுநர் Google Map வழித்தடத்தை பார்த்து காரை இயக்கி வந்துள்ளார். அப்போது, பைபாஸில் செல்வதற்கு பதிலாக பள்ளத்தாக்கு ஒன்றின் வழியாக காரை செலுத்தியுள்ளார். இதன் காரணமாக, நெடுஞ்சாலையின் தவறான பக்கத்தில் வந்த அந்த கார், எதிரே சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில், காரில் பயணித்த 2 இளம்பெண்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :