மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவு - திருமாவளவன்

by Staff / 20-01-2024 11:55:08am
மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவு - திருமாவளவன்

மாணவி ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை: மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவை ஏற்படுத்துகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த பள்ளி மாணவி ரேகாவுக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமைகளைத் தடுத்திட அரசு ஆணையம் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி ரேகாவின் புகாரையடுத்து கணவன், மனைவி ஆகிய இருவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குள்ள குடும்பமெனினும், காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo