உலகின் சிறந்த கார் விருது பட்டியல்... முதல் முறையாக மின்சார கார்கள் சேர்ப்பு...

by Admin / 21-08-2021 02:19:31pm
உலகின் சிறந்த கார் விருது பட்டியல்... முதல் முறையாக மின்சார கார்கள் சேர்ப்பு...

உலகின் சிறந்த கார் விருது பட்டியலில் முதல் முறையாக மின்சார கார்கள் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சர்வதேச அளவில் தலைசிறந்த கார்களுக்கான விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த கார்களுக்கான விருதை ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 கார் தட்டிச் சென்றது. அதன்படி 2022 உலகின் சிறந்த கார் விருதுக்கு கார்களை பரிசோதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் விருது பட்டியலில் முதல் முறையாக மின்சார கார்கள் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய மாற்றத்தை அங்கீகரிக்கும் முயற்சியாக விருது பட்டியலில் மின்சார கார்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories