இன்று தமிழகச் சட்டப்பேரவையின் 2026 -ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்,

by Admin / 20-01-2026 12:38:27am
இன்று தமிழகச் சட்டப்பேரவையின் 2026 -ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்,

இன்று தமிழகச் சட்டப்பேரவையின் 2026 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு ஆளுநர் ஆர் .என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. காலை 9:25 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். பின்னர் ஒன்பது முப்பது மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன் பேரவை கூட்டம் தொடங்கும்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 176 (1) ன் படி முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும்.. இதில் அரசின் கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறும். ஆளுநர் ஆங்கிலத்தில் தன் உரையை வாசித்த பிறகு சபாநாயகர் அப்பாவு அதன் தமிழ் மொழிபெயர்ப்பை வாசிப்பார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடரில் இடைக்கால வரவு -செலவு திட்டம் தாக்கல் செய்து குறித்து இன்று நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்..

 

Tags :

Share via

More stories

Logo