மகா சிவராத்திரி சதுரகிரி நாளை முதல் 11ஆம் தேதி வரை அனுமதி

by Staff / 07-03-2024 03:18:15pm
மகா சிவராத்திரி சதுரகிரி நாளை முதல் 11ஆம் தேதி வரை அனுமதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் சந்தன மகாலிங்கம் கோவில் மகா சிவராத்திரி மற்றும் மாசி மாத அமாவாசை முன்னிட்டு தமிழக மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் நாளை முதல் 11ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது வனத்துறை நிர்வாகம்.மேலும் காலை 6: 00 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via