முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குபுறப்பட்டார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆக.30) புறப்பட்டார். முன்னதாக பேசிய அவர், “வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழகத்தில் புதிதாக 32.81 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 922 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது” என பெருமிதம் தெரிவித்தார்.
Tags : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்ஒரு வாரம் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குபுறப்பட்டார்.