அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மாணவர்களின் புத்தகப் பையை சோதனை-அதிரடி உத்தரவு

அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மாணவர்களின் புத்தகப் பையை சோதனை செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை பள்ளி மாணவன் அரிவாள் வெட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களின் புத்தகப் பையை சோதனை செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் புத்தகப் பையை சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags : நெல்லை பள்ளி மாணவன் அரிவாள் வெட்டு அதிரடி உத்தரவு