தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்றுகூடுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று (அக்., 08) கூடுகிறது. அண்மையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், 4 புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதோடு, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது. புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை, அரசு திட்டங்கள், பருவமழை முன்னேற்பாடு, டாஸ்மாக் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
Tags : தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது.



















