11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, ஹால் டிக்கெட் வெளியீடு

by Staff / 11-03-2023 12:36:58pm
11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, ஹால் டிக்கெட் வெளியீடு

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3ஆம் தேதி வரையும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 14ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் 12ஆம் வகுப்பு தேர்வுக்காக 3 ஆயிரத்து 225 மையங்களும், 11ஆம் வகுப்பு தேர்வுக்காக 3 ஆயிரத்து 224 மையங்களும் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. தேர்வெழுத இருக்கும் மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சிறப்பு அறிவுரைகளுடன் அச்சிடப்பட்டு இருப்பதாக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via