மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

கோவை சுந்தராபுரம் கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாராத்தாள் (87). இவர் நேற்று வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது கதவை திறந்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மாராத்தாள் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மூதாட்டியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாராத்தாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசார் விசாரித்தனர். அதில், கழிவறையில் இருந்த மின்சார வயர் பழுதாகி இருந்துள்ளது. இதன் மூலம் நீர்க்கசிவால் கதவில் மின்சாரம் பாய்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :