நடிகரை காரில் கடத்தி தாக்குதல்

திருவள்ளூர் அருகே பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் முத்து பிரசாத் (வயது 26). சினிமாவில் துணை நடிகராக உள்ள இவர் புதுச்சேரியை சேர்ந்த துணை நடிகை ஒருவரை காதலித்துள்ளார். இதற்கிடையே துணை நடிகைக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்படுகிறது. ஆனால் துணை நடிகை இதற்கு மறுப்பு தெரிவித்தால், அவரை குடும்பத்தார் துன்புறுத்தியுள்ளனர். இதனிடையே இந்த விவகாரத்தில் முத்து பிரசாத் மற்றும் அவரது நண்பரை காரில் கடத்திய கும்பல் அவர்களை கொடூரமாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :