நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு - ஜனாதிபதி பதில்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனைதொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கக்கோரி வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதினார். இந்தநிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் சட்டமசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு பதில் அளித்துள்ளார்.
Tags :