1967 மற்றும் 1977 தமிழக அரசியலில் நிகழந்த மாற்றத்தை போல 2026-ல் மாற்றம் நிகழும்-விஜய்

by Staff / 21-08-2025 10:02:03pm
 1967 மற்றும் 1977 தமிழக அரசியலில் நிகழந்த மாற்றத்தை போல 2026-ல் மாற்றம் நிகழும்-விஜய்

திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த  விஜய் பிப்ரவரி 2, 2024 அன்று,தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்து, அதை நோக்கி மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. 2ஆவது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் இன்று நடைபெற்றது.

மாநாட்டு மேடை 200 அடி நீளத்திலும் 60 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 200 ஏக்கர் பரப்பில் சுமார் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேலரியின் முகப்பிலும் தொண்டர்களின் வருகையை பதிவு செய்து சான்றிதழ் வழங்கும் வகையில் க்யூ.ஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்காக நேற்று இரவு முதலே அவரது இரசிகர்களும், தொண்டர்களும் குவிந்தனர்.

கடும் வெயிலில் தொண்டர்கள் மாநாட்டு திடலில் அமர்ந்தனர். சிலர் குழந்தைகளை ஏந்திய படி வெயிலின் தாக்கத்தால் அவதியடைந்தனர். மறுபுறம் தொண்டர்கள் கோஷங்களை முழங்கினர். இதில் ரசிகர்கள் இருவர், அஜித் - விஜய் இருவரின் புகைப்படங்கள் அடங்கிய பேனரை கையில் தூக்கியபடி போஸ் கொடுத்தனர்.

கட்சியின் கொள்கை தலைவர்களான வேலு நாச்சியார், காமராஜர், பெரியரார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோர் படங்களுக்கு முன் மலர்கள் வைத்து மரியாதை செய்தார் விஜய். மேடையில் பேசுகையில், “சிங்கம் தனித்துவமானது. சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசைகளும் அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேட்டையில் கூட தன்னை விட பெரிய சைஸ் மிருகங்களை தான் குறிவைத்து தாக்கும். ஜெயிக்கும்”என்ற அவர்  “வீரம் விளையும் மாமதுரையை வணங்குகிறேன். இந்த மண்ணுல கால் வச்சதும் ஒருவர் தான் நினைவுக்கு வந்தார். அது, புரட்சி தலைவர் எம்ஜிஆர். அவரோடு பழகுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், என்னோட அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களோட பழக வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மண்ணைச் சேர்ந்தவர் தான். அவரை மறக்க முடியுமா!. தமிழ்நாடு மக்கள் நம்முடன் உணர்வுபூரமாக இருப்பவர்கள். அதற்கான எடுத்துக்காட்டு தான் இந்த மதுரை மக்கள்” என்றார்.

“எம்ஜிஆர் உடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், என்னுடைய அண்ணன் விஜயகாந்துடன் பழக வாய்ப்பு கிடைத்தது. தமிழக மக்கள் உணர்வு பூர்வமானவர்கள். அதற்கான அடையாளம் தான் இந்த மதுரை மண். 1967 மற்றும் 1977 தமிழக அரசியலில் நிகழந்த மாற்றத்தை போல 2026-ல் மாற்றம் நிகழும். அதனை உறுதியாக சொல்லும் மாநாடு தான் இது” என்றார். 

 1967 மற்றும் 1977 தமிழக அரசியலில் நிகழந்த மாற்றத்தை போல 2026-ல் மாற்றம் நிகழும்-விஜய்
 

Tags : 1967 மற்றும் 1977 தமிழக அரசியலில் நிகழந்த மாற்றத்தை போல 2026-ல் மாற்றம் நிகழும்-விஜய்

Share via