அரசு மேல்நிலைப் பள்ளி தற்காலிக தமிழ் ஆசிரியை கொலை -அமைச்சர்கள் அஞ்சலி 

by Editor / 20-11-2024 10:54:36pm
அரசு மேல்நிலைப் பள்ளி தற்காலிக தமிழ் ஆசிரியை கொலை -அமைச்சர்கள் அஞ்சலி 

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி தற்காலிக தமிழ் ஆசிரியை பள்ளி வளாகத்திலேயே வைத்து கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து உயிரிழந்த ஆசிரியை ரமணியின் உடலுக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் கோவி.செழியன் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

Tags : அரசு மேல்நிலைப் பள்ளி தற்காலிக தமிழ் ஆசிரியை கொலை -அமைச்சர்கள் அஞ்சலி 

Share via